By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
    ஈரான் டிரோன்களை உக்ரைன் படைகள் வீழ்த்தின… அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
    1 Min Read
    ஈரான் போர் குறித்து இன்று பாகிஸ்தானில் நடக்கிறது அமைதி பேச்சுவார்த்தை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    எந்த உணவுப் பொருட்களை ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என தெரியுங்களா?
    1 Min Read
    தொப்பையையும் குறைக்கும் அன்னாசிப்பழம்!
    1 Min Read
    ஆரஞ்சு ஜூஸ் தரும் ஆரோக்கிய நன்மைகள்!!
    1 Min Read
    குறைந்த செலவில் ஒரு சுற்றுலாத் தலம்… கொடிவேரி அணைக்கட்டு!!!
    1 Min Read
    கடல் ஆர்வலர்களுக்கு ஏற்ற சுற்றுலாத்தலம் தூத்துக்குடி!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நவீன வசதிகளுடன் கூடிய அரசு நெல் அரவை ஆலை கொண்டு வருவேன்… திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் உறுதி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > நவீன வசதிகளுடன் கூடிய அரசு நெல் அரவை ஆலை கொண்டு வருவேன்… திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் உறுதி
அரசியல் செய்திகள்

நவீன வசதிகளுடன் கூடிய அரசு நெல் அரவை ஆலை கொண்டு வருவேன்… திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் உறுதி

Nagaraj
Last updated: April 12, 2026 7:46 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு நெல் அரவை ஆலை அமைக்கப்படும் என தஞ்சாவூர் திமுக சட்டமன்ற வேட்பாளர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்.ராமநாதன்
மாதாக்கோட்டை, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, அன்னை தெரசா நகர், மாதாக்கோட்டை, மேலவஸ்தாச்சாவடி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து திலகம் இட்டு வேட்பாளர் சன் ராமநாதனை வரவேற்றனர். வழி நெடுகிலும் ஏராளமான இளைஞர்கள், பெண்கள் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நேற்று முன்தினம் மாலை வல்லம் பேரூர் பகுதியில் வல்லம் பேருந்து நிலையம், பழைய அக்ரஹாரத் தெரு, அகிழாங்கரை மேட்டுத் தெரு, ரெட்டிபாளையம் ,பிள்ளையார் கோவில் தெரு, பெரியார் நகர், அண்ணாசிலை ஆகிய பகுதிகளில் மேளதாளம் முழங்க வீடு வீடாக சென்று சண்.ராமநாதன் வாக்கு கேட்டார்.


வேட்பாளருடன் எம்.பி.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம்,
துணை மேயர் அஞ்சுகம் பூபதி, வல்லம் நகர செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது வேட்பாளர் சண்.ராமநாதன் பேசுகையில், தஞ்சை சட்டமன்றத் தொகுதி திமுக வின் கோட்டை. நான் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். எனவே உதயசூரியன் சின்னத்திற்கு மக்கள் வாக்களிப்பது உறுதியாகிவிட்டது.

அந்த வகையில் மீண்டும் தஞ்சை தொகுதியில் திமுக வெற்றி பெறும்.
என்னை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பும் தஞ்சை தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வல்லம் பகுதி மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் ஆன பிறகு உடனடியாக நிறைவேற்றுவேன்.
கல்லணையில் காவேரி வெண்ணாறு புது.ஆறு இணைக்கும் இடத்தில்
புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு நெல் அரவை ஆலை அமைக்கப்படும்.
நெல் விளையும் பகுதிகளில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நகரும் நெல் உலர்த்திகள் தேவைக்கேற்ப வழங்கப்படும்.
நெல் அதிகம் விளையும் பகுதிகளில் SiloStunge முறையில் தானிய சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள பாரம்பரிய சித்த மருத்துவ முறைகள் குறித்த அனைத்துத் தரவுகளும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலம் ஆவணப்படுத்தப்படும். தஞ்சாவூரில் மேலும் ஒரு ஐடி பார்க் கொண்டுவர தேவையான முயற்சிகளை மேற்கொள்வேன். இல்லத்தரசிகள் தங்களுடைய வீட்டுக்கு தேவையான வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி, கிரைண்டர், மிக்ஸி, மைக்ரோவேவ் அவன், இன்டக்ஷன் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை புதிதாக வாங்க தலா ரூ.8000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்பது திமுக தேர்தல் அறிக்கையில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
பெண்களுக்கு இது பேருதவியாக அமையும்.

நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை: லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 உயர்த்தி வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை: இனி மாதம் ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை: ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும். ரூ.8,000-லிருந்து ரூ.12,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். மீன்பிடி குறைவுகால நிவாரணம்: ரூ.6,000-லிருந்து ரூ.9,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படும். எனவே எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்தால் தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தர பாடுபடுவேன் என சண்.ராமநாதன் பேசினார்.

வேட்பாளருடன் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வீட்டுக்கு வீடு நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

You Might Also Like

தமிழ்நாட்டில் ஏஐ சிட்டி அமைக்கப்படும்… தவெக தலைவர் விஜய் உறுதி

மக்களிடம் மகிழ்ச்சியை காண்கிறேன்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

கன்னியாகுமரியில் இன்று தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த கோரிக்கை

உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்… பிரதமர் மோடி பதிவு

வெற்றி உங்களுக்குதான்… மலர்தூவி வாழ்த்துக்கள் தெரிவித்த பெண்கள்: யாருக்கு தெரியுங்களா?

TAGGED:active campaigningCandidate San.RamanathanThanjavurVallamvote collectionதஞ்சாவூர்தீவிர பிரச்சாரம்வல்லம்வாக்குகள் சேகரிப்புவேட்பாளர் சண்.ராமநாதன்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

நவீன வசதிகளுடன் கூடிய அரசு நெல் அரவை ஆலை கொண்டு வருவேன்… திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் உறுதி

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?