சென்னை: தவெக தலைவருடன் இணைய வாய்ப்புள்ளதா என்பதற்கு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை என்ன சொன்னார் தெரியுங்களா?
தவெக தலைவர் விஜய்யுடன் இணைய வாய்ப்புள்ளதா? என்பது குறித்த கேள்விக்கு, “தவெகக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதா என்பது குறித்து இறுதி முடிவை ராகுல் காந்தி மற்றும் டெல்லி உயர்நிலைத் தலைமையே முடிவு எடுக்கும்” என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
மேலும், “கூட்டணி தொடர்பான விவகாரங்களில் மாநில மட்டத்தில் கருத்துக்கள் இருந்தாலும், கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு தேசிய தலைமையின் ஆலோசனைக்குப் பிறகே அறிவிக்கப்படும்” என்றார்.