தஞ்சாவூா்: கைவிளக்கு ஏந்திய காரிகை என அழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12ந் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று அவரது 206-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்திற்கு செவிலியர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். இதையடுத்து மெழுகுவர்த்தி ஏந்தி
“எனது வாழ்வில் மிகவும் தூய்மையாகவும் எனது பணியை உண்மையாக செய்வேன்” என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 1 ஆர். வனிதா, செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 2 என். சித்ரா, செவிலியர்கள் கீதா, அருண்குமார், தனசேகர் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.