சென்னை: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தேர்வெழுதிய 8 லட்சத்து 70 ஆயிரத்து 643 பேரில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94 புள்ளி 31 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை 8 ஆம் தேதி முதல் மறுதேர்வு நடத்தப்படும் என அவர் கூறினார்.
வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
97 புள்ளி 57 சதவீத தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 10 ஆயிரத்து 476 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஏதேனும் ஒரு படத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 132 ஆக உள்ளதாகவும், 5 ஆயிரத்து 171 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சியை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.