சென்னை: தமிழகத்தில் பள்ளி வாகனங்களுக்கு லொகேசன் அறிய உதவும் VLTD கருவி பொருத்துவது கட்டாயமல்ல என்றும் மற்ற மாநிலங்களை போல அரசு மறு விலை நிர்ணயம் செய்யும் வரை கனரக வாகனங்களுக்கு இந்த கருவி பொறுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல தேர்தல் நடைமுறையை பயன்படுத்தி தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு விரும்பிய இடத்துக்கு இடமாற்றல் உத்தரவு வழங்கியதிலும், குறிப்பிட்ட நிறுவனத்திடம் மட்டுமே வாகனங்களுக்கு ரெப்லக்டர் ஸ்டிக்கர் வாங்கி ஒட்ட வேண்டும் என்பதிலும் பெரிய அளவில் போக்குவரத்து அதிகாரிகள் பலனடைந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதால் அது குறித்தும் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது