அமெரிக்கா: அமெரிக்காவின் மேற்கு ஐடஹோ மாகாணத்தில் உள்ள மவுண்டன் ஹோம் விமானப்படை தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 17) நடைபெற்ற புகழ்பெற்ற ‘கன்பைட்டர் ஸ்கைஸ்’ (Gunfighter Skies) வான்வெளி சாகசக் காட்சியின் போது ஒரு பயங்கர விபத்து நேரிட்டுள்ளது.
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான இரண்டு அதிநவீன போர் விமானங்கள் தங்களின் வான்வழி சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நடுவானில் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து சாகசக் காட்சியைக் கண்டுகளித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பெரும் பீதிக்குள்ளாகினர்.