நேபாளம்: ஆக்கிரமிப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டவா்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
நேபாள தலைநகா் காத்மாண்டுவில் பாகமதி நதிக்கரை மற்றும் பொது இடங்களில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளில் வசித்து வந்த நிலமற்ற குடியேறிகளுக்கு அந்நாட்டு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
நேபாள தலைநகா் காத்மாண்டுவில் பாகமதி நதிக்கரை மற்றும் பொது இடங்களில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகளில் வசித்து வந்த நிலமற்ற குடியேறிகளுக்கு அந்நாட்டு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
பிரதமா் பாலேந்திர ஷா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆக்கிரமிப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்குத் தற்காலிக தங்குமிட செலவாக அடுத்த 3 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.15,000 வழங்கப்படும். விவரங்களின் சரிபார்ப்புக்கு பிறகு, மறுவாழ்வுக்காக ஒருமுறை மட்டும் ரூ.25,000 வழங்கப்படும்.
கடந்த மாதம் தொடங்கிய இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால், சுமாா் 2,600 குடும்பங்களைச் சோ்ந்த 15,000 போ் வரை பாதிக்கப்பட்டுள்ளனா். இவ்விவகாரம் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.