சிங்கப்பூர்: பி.வி.சிந்து முன்னேற்றம்… சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் லக்ஷ்யா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
முன்னாள் உலக சாம்பியனான சிந்து, ஜப்பானின் ரிகோ குஞ்சியை 21-9, 21-12 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெறும் 37 நிமிடங்களில் வெற்றி பெற்றார்.
அடுத்த சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான கொரியாவின் ஆன் சே யங்கை சிந்து எதிர்கொள்கிறார். இதுவரை அவரை சிந்து வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லக்ஷ்யா சென், தாய்லாந்தின் குன்லாவத் விதிட்சர்ன் முதுகு வலி காரணமாக விலகியதால் காலிறுதிக்கு முன்னேறினார்.
அதேபோல் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடியான சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி, சீன தைபே ஜோடியை 21-15, 11-21, 21-18 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றனர். அடுத்த சுற்றில் மலேசிய ஜோடியை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.