By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம்: புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!
    1 Min Read
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
    பாடகி கெனிஷாவுக்கு துபாய் நீதிமன்றம் ரூ. 1.30 லட்சம் அபராதம் விதிப்பு
    1 Min Read
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம்
    1 Min Read
    ட்விஷா சர்மா மரணம்: மாமியாரை கைது செய்த சிபிஐ
    1 Min Read
    ஹேப்பி லேண்ட் பூங்காவில் ராட்டினம் முறிந்து விபத்து: 5 பேர் படுகாயம்
    1 Min Read
    நீட் மறுதேர்வை நேரடியாக கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம்!
    1 Min Read
    டெல்லியில் பலத்த மழை: 521 விமான சேவைகள் பாதிப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வாழ்க்கை சுமூகமாக நகர பெண்கள் எடுக்கும் முடிவுகள்
    1 Min Read
    35 வயதிற்கு மேல் கருத்தரிப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள்
    1 Min Read
    குழந்தைகள் வளரும்போது அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்
    1 Min Read
    உங்கள் கணவருடன் விவாதம் செய்யும் போது சண்டை வராமல் தடுப்பது எப்படி?
    1 Min Read
    கணவன்மார்களே மனைவியை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அடுத்த கட்டம் என்ன? சி.வி.சண்முகம் – விஜயபாஸ்கர் தீவிர ஆலோசனை!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > அடுத்த கட்டம் என்ன? சி.வி.சண்முகம் – விஜயபாஸ்கர் தீவிர ஆலோசனை!
அரசியல் செய்திகள்

அடுத்த கட்டம் என்ன? சி.வி.சண்முகம் – விஜயபாஸ்கர் தீவிர ஆலோசனை!

Nagaraj
Last updated: May 29, 2026 8:57 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

புதுக்கோட்டை: தீவிர ஆலோசனை… தமிழக அரசியல் பயணத்தில் அடுத்த நிலைப்பாடு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கட்சியின் தொடர் தோல்விக்கு பொதுச்செயலாளர் பழனிசாமியின் அணுகுமுறையே காரணம் எனக் கூறி முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர்.

மேலும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறி முதல்வர் விஜய் அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 25 பேரும் வாக்களித்தனர். இதனால் கட்சிக்குள் மோதல் தீவிரமடைந்தது. தவெக ஆதரவு எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை.

இதற்கிடையே 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி உட்பட 18 எம்எல்ஏக்கள் பழனிசாமியை சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்தனர். ஆனால் சி.வி.சண்முகம் இதில் பங்கேற்கவில்லை.

இதனால் அவர் அடுத்ததாக என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. ஒருபுறம் அவர் அதிமுகவிலேயே தொடருவார் என்றும் மற்றொரு புறம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணையலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த சூழலில் கடந்த மூன்று வாரங்களாக சென்னையில் முகாமிட்டிருந்த சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். அவர்களிடம் “நீங்கள் கலங்க வேண்டாம், எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே செய்தியாளர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கேட்டபோது, “எனக்கு வாக்களித்த மயிலம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதே முதல் கடமை” என்றார்.

அதேபோல் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தனது அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சென்ற குழுவில் விஜயபாஸ்கர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் விராலிமலை தொகுதி இலுப்பூரில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பிய அவர், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களிடம் கருத்து கேட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுகவில்தான் தொடர்கிறேன். 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். தொகுதி மக்கள் தெரிவித்த கருத்துகளை உள்வாங்கியுள்ளேன். தவெகவுக்கு மாறப் போகிறேனா என்ற யூகத்திற்கு இப்போது பதில் அளிக்க முடியாது” என்றார்.

You Might Also Like

நதிநீர் இணைப்பு காலத்தின் கட்டாயம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

வைகோ விளக்கம்: அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைப்பில் ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டை ஏற்கவில்லை

ஊழலற்ற தூய்மையான ஆட்சிதான் முதல்வரின் நோக்கம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

‘ஜனநாயகன்’ சமூக கொண்டாட்டமாக வரும் – அமைச்சர் ராஜ்மோகன்

காசாவில் ராணுவ கட்டுப்பாட்டை விரிவுப்படுத்தும் இஸ்ரேல்

TAGGED:AIADMKCVShanmugamEPSmlaTamilNaduPoliticsTVKVijayabaskarஅதிமுக. சிவிசண்முகம்எடப்பாடிபழனிசாமிஎம்எல்ஏதமிழகஅரசியல்தவெகவிஜயபாஸ்கர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

நதிநீர் இணைப்பு காலத்தின் கட்டாயம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?