சென்னை: கொளுத்திய வெயில்… கத்திரி வெயிலின் கடைசி நாளான நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் வெப்பம் நிலவியது. சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் அதாவது 41.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 15 நகரங்களில் வெயில் சதமடித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம், மதுரை, வேலூர் ஆகிய நகரங்களில் தலா 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மேலும் கடலூர், ஈரோடு, கரூர், காரைக்கால், நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, திருப்பத்தூர், திருச்சி மற்றும் திருத்தணி உள்ளிட்ட நகரங்களிலும் 38 டிகிரி செல்ஷியஸை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும், போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.