சென்னை: பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றங்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனைகள் மட்டுமே நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் சிறுமிகள் மீதான பாலியல் தொல்லை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 3 வயது குழந்தை மீதான பாலியல் வன்கொடுமை சம்பவம் மனிதநேயத்திற்கு எதிரான கொடூரச் செயலாகும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.