கபடி வீராங்கனை மீதான பாலியல் வன்கொடுமை புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. சம்பவத்தில் விரைந்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து விளையாட்டு மையங்களிலும் பாதுகாப்பு நடைமுறைகள், புகார் குழுக்கள் மற்றும் சிசிடிவி வசதிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.