சென்னை: வரும் ஜூன் 11-ம் தேதி தொடங்கும் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் ஒளிபரப்பு உரிமையை ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடரில் 48 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 104 போட்டிகள் 39 நாட்கள் நடைபெற உள்ளன.
இந்த தொடரை இந்தியாவில் எந்த நிறுவனம் ஒளிபரப்பும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஜீ நிறுவனம் உரிமையை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
ஜீ குழுமத்தின் புதிய நான்கு சேனல்களிலும், ஜீ5 ஓடிடி தளத்திலும் இந்த போட்டிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளன.