பெண்கள் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதியில் சிலி அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நவ்னீத் கவுர், தீபிகா, நேஹா மற்றும் ருதுஜா டடாசோ கோல்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை இந்தியா சந்திக்கிறது.