நெல்லை: நெல்லை டவுனில் அமைந்துள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு கடந்த மே 29ஆம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் பந்தல் அமைத்தல், தேர் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் விநாயகர் திருவிழா கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் கொடிமரத்தில் விநாயகர் கொடி ஏற்றப்பட்டது.
ஆனிப் பெருந்திருவிழா ஜூன் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்வான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி தேர் உள்ளிட்ட 5 தேர்கள் பங்கேற்கும் ஆனித் தேரோட்டம் ஜூன் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.