புதுடில்லி: அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், குவைத் மற்றும் பஹ்ரைன் நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
குவைத் நோக்கி இரண்டு ஏவுகணைகளும், பஹ்ரைன் நோக்கி மூன்று ஏவுகணைகளும் ஏவப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் பஹ்ரைன் வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்தன.
எனினும், குவைத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.