ஈரானில் ஹிஜாப் அணியாமல் பாடிய பாடகி பரஸ்தூ அஹ்மதிக்கு 74 சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தேசபக்தி பாடலை நேரலையில் பாடியிருந்தார். இந்த நிகழ்ச்சி யூடியூபிலும் ஒளிபரப்பப்பட்டது. ஈரானில் பெண்களுக்கான கடுமையான ஆடை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. அதனை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.