அமெரிக்கா: பிரதமர் நரேந்திர மோடி தனது நல்ல நண்பர் என்றும், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் ஒருமுறை தனது நல்ல நண்பர் என்று குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் இந்தியா, அமெரிக்க நிறுவனங்கள் மீது அதிக வரிகளை விதித்ததாக குற்றம்சாட்டிய டிரம்ப், தற்போது நிலைமை மாறிவிட்டதாக கூறினார்.
“நாங்கள் இந்தியாவுடன் அதிக வருவாய் ஈட்டுகிறோம். உங்கள் பிரதமர் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனது நல்ல நண்பர். எங்களுக்கிடையே நல்லுறவு உள்ளது. நிச்சயமாக ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவோம்” என்று டிரம்ப் தெரிவித்தார்.
மோடி மற்றும் டிரம்ப் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக இந்திய மற்றும் அமெரிக்க வர்த்தக குழுக்கள் அண்மையில் பல சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.