பாகிஸ்தான்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த ஜேஏஏசி அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.
இந்த போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து, பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதலாக மாறியது.
ராவலகோட் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வன்முறையில் 30 பேர் உயிரிழந்ததாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.