சென்னை: தமிழ்நாடு அரசு நிர்வாக மாற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் நிர்வாகத் தேவைகளை முன்னிட்டு மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த நிஷாந்த் கிருஷ்ணா, சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், அங்கு பணியாற்றி வந்த கே. பொற்கொடிக்கு பதிலாக பொறுப்பேற்கிறார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த கே. பொற்கொடி, சமூக நலத்துறையின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மாற்றப்பட்ட சரண்யா அரி வகித்த பதவியை அவர் ஏற்க உள்ளார்.
மேலும், தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் ஆட்சியராக (வளர்ச்சி) இருந்த ஆர். ஐஸ்வர்யா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றங்கள் மாநில நிர்வாகத்தில் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.