புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட்டால் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான வைத்திலிங்கம், பல்வேறு அரசியல் மற்றும் கல்வி தொடர்பான கருத்துகளை வெளியிட்டார்.
மத்திய அரசின் கல்விக் கொள்கைகள் மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், சிபிஎஸ்இ தேர்வு முறைகளில் தொடர்ந்து குளறுபடிகள் நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், புதுச்சேரி அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், முதலமைச்சர் ரங்கசாமியின் நிர்வாகம் சர்வாதிகார போக்கில் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
புதுச்சேரியில் த.வெ.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொடர்வதாகவும், தட்டாஞ்சாவடி தொகுதியில் த.வெ.க. போட்டியிட்டால் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.