பிரான்ஸ்: பிரான்ஸ் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பிரான்சின் எவியன் லெஸ் பெய்ன்ஸ் நகரில் ஜி7 உச்சி மாநாடு உலக கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, உலகளாவிய ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் விவாதிக்கப்படுகின்றன.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்.
ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினை, உலக பொருளாதார நிலைமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து தலைவர்கள் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.