மகாராஷ்டிராவில் நாய் கடி தடுப்பூசி செலுத்திய சில நிமிடங்களிலேயே 17 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழே விழுந்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தடுப்பூசியின் பக்கவிளைவா அல்லது தலையில் ஏற்பட்ட காயமா மரணத்திற்குக் காரணம் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உறுதியாக தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.