தஞ்சை அருகே காசவளநாட்டில் மொஹரம் பண்டிகையையொட்டி இந்துக்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் பாரம்பரியம் 300 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. மத வேறுபாடுகளைத் தாண்டி மக்கள் ஒற்றுமையாக வாழும் இந்த நிகழ்வு, உலகிற்கே மதநல்லிணக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.