சென்னை: தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஸ்டான் வென்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பிரதீப் குமார் ராஜரத்தினம் ரூ.2 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அவசரகால நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சமூக நலன் சார்ந்த பணிகளுக்கு தொழில்துறையினர் மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த நிதியுதவி கவனம் பெற்றுள்ளது.
