புதுடில்லி: இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ம் தேதியை ‘இந்தியா சுதந்திர தினம்’ என நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாகாணங்கள் அறிவித்துள்ளன. இதற்கான தனித்தனி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய சமூகத்தினருக்கு இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா–அமெரிக்கா இடையேயான மக்களிடையிலான உறவையும் இரு நாடுகளின் நீண்டகால நட்புறவையும் இந்த அங்கீகாரம் பிரதிபலிப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் அமெரிக்காவிலும் சிறப்பாக நடைபெற உள்ளன.
