சீனா: சீனாவின் கிழக்குப் பகுதிகளில் டால்பின் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் நகரிலும் புயலின் தாக்கம் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு பயணிகள் அவதியடைந்துள்ளனர். சில ரயில் மற்றும் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். புயல் நிலவரத்தை சீன அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
