அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
வெள்ளப்பெருக்கால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் வீடுகள் மற்றும் சாலைகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.
மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண முகாம்களில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கியுள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
