By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நடுவானில் பரபரப்பு: காயமடைந்த நிலையிலும் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய இந்திய கேப்டன்!
    1 Min Read
    “அசாத்திய தைரியம்” – இந்திய விமானி சுமித் மச்சாருக்கு நெதன்யாகு பாராட்டு!
    1 Min Read
    ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் பதற்றம் நீடிப்பு: ஈரான் முன்வைத்த திட்டம் குறித்து டிரம்ப் கடும் நிலைப்பாடு!
    1 Min Read
    நோவா அர்கமானியை கடத்தியதாக கூறப்பட்ட ஹமாஸ் உறுப்பினர் கொல்லப்பட்டார்: நுசிராத்தில் இஸ்ரேல் தாக்குதல்
    1 Min Read
    வௌவால்களுக்காக காடு சீரமைப்பு: மரங்களை முழுமையாக வெட்டாமல் புதிய ‘ஹேக் அண்ட் ஸ்க்விர்ட்’ நுட்பம்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மதுராந்தகம் இடைத்தேர்தல்: நாளை விஜய் ரோடு ஷோ – மரகதம் குமரவேலுக்கு ஆதரவு திரட்டுகிறார்!
    1 Min Read
    60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்: ரூ.2 கோடி செலவிட்ட 80 வயது விவசாயி
    1 Min Read
    தண்டவாளத்தில் புகுந்த ஆடுகள் மீது ரயில் மோதல்: 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி
    1 Min Read
    பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 1,124 புள்ளிகள் வீழ்ச்சி – முதலீட்டாளர்களுக்கு ரூ.8.9 லட்சம் கோடி இழப்பு!
    1 Min Read
    தலைமை தேர்தல் ஆணையர் மீது உச்சநீதிமன்றத்தில் மனு: “தன்னிச்சையான முடிவுகள்” குறித்து விசாரணை கோரிக்கை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பருவ மழையை எதிர்கொள்ள தஞ்சாவூர் மாநகராட்சி தயார் மேயர், ஆணையர் தகவல்
    1 Min Read
    தஞ்சையில் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
    2 Min Read
    பட்டாசு விவகாரம்: முழுமையான தடை இல்லை; நேரக்கட்டுப்பாடு அவசியம் – உச்சநீதிமன்றம்
    1 Min Read
    9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை!
    1 Min Read
    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சேர்த்துவிடுவதாக மிரட்டல்: இன்ஸ்பெக்டர் புஹாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தமிழகத்துக்கு காவிரி நீர்: கர்நாடகாவுக்கு எதிரான மனு… ஆகஸ்ட் 13-ல் உச்சநீதிமன்றம் விசாரணை!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > தமிழகத்துக்கு காவிரி நீர்: கர்நாடகாவுக்கு எதிரான மனு… ஆகஸ்ட் 13-ல் உச்சநீதிமன்றம் விசாரணை!
இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீர்: கர்நாடகாவுக்கு எதிரான மனு… ஆகஸ்ட் 13-ல் உச்சநீதிமன்றம் விசாரணை!

Nagaraj
Last updated: August 10, 2026 5:58 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

புதுடெல்லி: கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீர் பங்கினை உடனடியாக விடுவிக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை ஆகஸ்ட் 13-ந்தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுகளின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் ஆகஸ்ட் 3-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை ஆகஸ்ட் 13-ந்தேதி விசாரிப்பதாக தெரிவித்தது.

காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஒதுக்கிய அளவிலும், கர்நாடகா உண்மையில் தமிழகத்துக்கு திறந்துவிட்ட நீரின் அளவிலும் பெரும் பற்றாக்குறை இருப்பதாக தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.

காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 139-வது கூட்டத்தில், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 வரை பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கனஅடி நீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஜூலை 30-ந்தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்திலும் இந்த உத்தரவு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு வெளியிட்ட தகவலின்படி, ஆகஸ்ட் 3-ந்தேதி நிலவரப்படி கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி மற்றும் ஹேமாவதி அணைகளில் மொத்தம் 77.537 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்துக்கு விகிதாச்சார அடிப்படையில் கிடைக்க வேண்டிய நீரின் அளவு 26.954 டி.எம்.சி. என தமிழக அரசு கணக்கிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த 4.536 டி.எம்.சி. அளவு மிகக் குறைவு என்றும் தமிழக அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 13-ந்தேதி நடைபெற உள்ளது.

You Might Also Like

பட்டாசு விவகாரம்: முழுமையான தடை இல்லை; நேரக்கட்டுப்பாடு அவசியம் – உச்சநீதிமன்றம்

மதுராந்தகம் இடைத்தேர்தல்: நாளை விஜய் ரோடு ஷோ – மரகதம் குமரவேலுக்கு ஆதரவு திரட்டுகிறார்!

60 ஆண்டுகளாக லாட்டரி மோகம்: ரூ.2 கோடி செலவிட்ட 80 வயது விவசாயி

தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்: 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தண்டவாளத்தில் புகுந்த ஆடுகள் மீது ரயில் மோதல்: 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

TAGGED:Cauvery waterCauvery Water ManagementkarnatakaSupreme CourtTamil Nadu FarmersTamil Nadu Governmentஉச்சநீதிமன்றம்கர்நாடகாகாவிரி நீர்காவிரி நீர் மேலாண்மைதமிழக விவசாயிகள்தமிழ்நாடு அரசு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
தமிழகம்

பருவ மழையை எதிர்கொள்ள தஞ்சாவூர் மாநகராட்சி தயார் மேயர், ஆணையர் தகவல்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?