மும்பை: மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.
கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்ததை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
