நியூசிலாந்து: நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், கட்சிக்குள் நடைபெற்ற முக்கிய தலைமைப் பதவி வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
நாட்டின் அடுத்த தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றது.
கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதங்கள் எழுந்திருந்த நிலையில், தலைமைப் பதவி வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் லக்சன் மீண்டும் தலைமைப் பொறுப்பில் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
