மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கான மொழி விதிகளில் கடுமையான நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மராத்தி மொழியை கற்றுக்கொள்ளாத ஓட்டுநர்களுக்கு இடைநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் மொழித் திறனை பெறவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் வகையில் விதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மாநிலத்தில் மொழி தொடர்பான அரசியல் மற்றும் சமூக விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வாகன ஓட்டுநர்களுக்கு உள்ளூர் மொழி அறிவு அவசியம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
