புதுடில்லி: ஆகஸ்ட் 12-ம் தேதி வானியல் ஆர்வலர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக அமைந்துள்ளது.
இந்த நாளில் ஆண்டின் ஒரே முழு சூரிய கிரகணம் நிகழ்வதுடன், பெர்சீட் விண்கல் மழையும் உச்சத்தை எட்டுகிறது. அமாவாசை நிலவின் காரணமாக வானம் இருண்ட நிலையில் இருப்பதால், சில பகுதிகளில் விண்கல் மழையை பார்ப்பதற்கு சிறந்த சூழல் உருவாகும் என வானியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் சூரிய கிரகணத்தின் முழுப்பாதை இந்தியாவை கடக்காததால், இந்தியாவில் முழு சூரிய கிரகணத்தை நேரடியாக காண முடியாது.
