புதுடில்லி: ஜார்க்கண்ட் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் 24-வது நாளாக நீடித்து வருகிறது.
முதல்வர் ஹேமந்த் சோரன் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ள மாணவர்கள், வரும் 20-ம் தேதி முதல்வரின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடிதம் எழுதியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு காங்கிரஸ் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
