மும்பை: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் நேரில் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தனது அறக்கட்டளை தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்த சோனு சூட், அவர்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர நீண்ட காலம் தேவைப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், “இப்போது நாம் அவர்களுக்கு உதவாவிட்டால், வேறு எப்போது உதவப் போகிறோம்? அனைத்து பெரிய நிறுவனங்களும் தங்களது CSR நிதி மூலம் உதவ முன்வர வேண்டும். ‘சூட் சேரிட்டி பவுண்டேஷன்’ சார்பில் தேவையான உதவிகளை வழங்க தயாராக இருக்கிறோம்” என அவர் கூறினார்.
நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் சோனு சூட் பாராட்டினார்.
