புதுடெல்லி: ரூ.1,322 கோடி கடன் பெறுவதற்காக போலி சொத்து மதிப்பீட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக கூறப்படும் புகாரில், ஜீ குழுமத்தின் நிறுவனர் சுபாஷ் சந்திரா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஜீ குழும நிறுவனங்கள் மீது ஏற்கனவே பெரும் கடன் சுமை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜீ குழும நிறுவனங்களுக்கு எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.1,322 கோடி கடன் பெறுவதற்காக போலியான சொத்து மதிப்பீட்டு ஆவணங்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் சுபாஷ் சந்திரா மற்றும் சில தனிநபர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும் ஜீ குழுமத்துடன் தொடர்புடைய வசந்த் சாகர் பிராப்பர்டீஸ் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் பங்கஜ் சுரோலியா உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
