மும்பை: இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து ஏற்பட்ட சரிவு முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து நான்காவது வர்த்தக அமர்விலும் சரிவை சந்தித்துள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்வது, அதிகரித்து வரும் பத்திர வருவாய் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்திய சரிவில் முதலீட்டாளர்களின் சந்தை மதிப்பில் சுமார் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் இருந்து ரூ.35,861 கோடியை திரும்பப் பெற்றுள்ளனர்.
உலகளாவிய பொருளாதார சூழல், எண்ணெய் விலை மற்றும் வெளிநாட்டு முதலீட்டு நகர்வுகள் ஆகியவை இந்த வார பங்குச்சந்தையின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.
