சென்னை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஓ.பன்னீர்செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களில் நேற்று வந்து கையெழுத்திட்டார்.
ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவஸ்கனியிடம் தோல்வியடைந்தார்.
இதையடுத்து, நவஸ்கனியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து கையெழுத்திடுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தார்.
உயர் நீதிமன்றப் பதிவு அலுவலகத்துக்கு வழக்கறிஞர்களுடன் வந்த ஓ.பன்னீர்செல்வம், அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து கையெழுத்திட்டார்