விமானப் பயணிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் இன்று முதல் எரிபொருள் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலையில் ஏற்பட்ட உயர்வு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளில் பயணக் கட்டணம் கூடும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே விமானப் பயணச் செலவு அதிகரித்து வரும் நிலையில், எரிபொருள் கட்டணம் உயர்த்தப்படுவது பயணிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
