பிரான்சில் பள்ளிகளின் மோசமான கட்டமைப்பு, அதிகமான மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டித்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது.
திங்களன்று நடந்த மோதலில் வடக்கு பிரான்சைச் சேர்ந்த இளம் மாணவர் ஒருவரின் கை பலத்த காயமடைந்து பறிபோனதாக தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டக்காரர்களுக்கும் கலவரத் தடுப்பு போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நிலைமை மேலும் பதற்றமடைந்துள்ளது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வி கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதே மாணவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
