மத்திய பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் 5 சிறுத்தைக் குட்டிகள் ஒரே நேரத்தில் பிறந்துள்ளன. இதன் மூலம் இந்தியாவில் உள்ள சிறுத்தைகளின் மொத்த எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
இந்த 5 குட்டிகளின் தந்தை போட்ஸ்வானாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தை என்றும், தாய் இந்தியாவில் ஏற்கனவே குட்டிகளை ஈன்ற சிறுத்தை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பிறந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை மட்டும் தற்போது 41 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்காவில் இருந்து சிறுத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வந்து அவற்றை மீண்டும் நாட்டில் பெருக்குவதற்காக செயல்படுத்தப்பட்ட ‘புராஜெக்ட் சீட்டா’ திட்டத்திற்கு இந்த பிறப்பு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. மரபணு பன்முகத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் தொடர்ந்து புதிய சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன.
