முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய ஐபிஓ அக்டோபர் 21-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஐபிஓ மூலம் சுமார் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர் திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் மிகப்பெரிய ஐபிஓவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குகள் அக்டோபர் 28-ம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்படலாம். இதன் மூலம் 2024-ம் ஆண்டு ஹூண்டாய் மோட்டார் இந்தியா மேற்கொண்ட சுமார் 2.9 பில்லியன் டாலர் ஐபிஓ சாதனையை ஜியோ முறியடிக்க வாய்ப்புள்ளது.
திரட்டப்படும் நிதியில் பெரும்பகுதி ஜியோவின் தொலைத்தொடர்பு பிரிவின் கடனை திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
