மருந்து நிறுவனங்கள் டாக்டர்களுக்கு பரிசுகள் மற்றும் பிற சலுகைகள் வழங்குவது தொடர்பாக சட்டப்பூர்வ கட்டுப்பாடு தேவைப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருந்து நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் நடைமுறைகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும். மருத்துவத் துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
