உக்ரைனின் பிரிலுகி நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று தாக்குதலில் சிக்கி இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் இருப்பதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதலில் பலர் காயமடைந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.
இந்த தாக்குதலை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கடுமையாக கண்டித்துள்ளார். ரஷ்யா பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
