சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றதாக தெரிவித்துள்ளனர்.
தாக்குதலின்போது விமான நிலையப் பகுதியில் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும், ஒரு விமானத்தில் தீப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக சவுதி தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில் மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ரியாத் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் தாக்கமாக சர்வதேச விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. லுஃப்தான்சா மற்றும் இந்தியாவின் ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் ரியாத் செல்லும் சில விமானங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
