அசோக் செல்வன் நடித்த ‘அன்பில் அவன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து படக்குழு நடத்திய வெற்றி சந்திப்பில் அசோக் செல்வன் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். படத்தின் இதயமும் ஆன்மாவும் சரியான இடத்தில் இருப்பதாக தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
திரைப்படம் தொடர்பான ரசிகர்களின் கருத்துகளை மதிப்பதாகவும், ஒவ்வொரு படத்திற்கும் பார்வையாளர்களின் வரவேற்பு மாறுபடுவது இயல்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.
