சென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளாகினர்.
நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும்.
நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. எனவே, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும், மழைநீர் தேங்கிய சாலைகளில் செல்லும்போது கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அவற்றைத் தொடாமல் மின்வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கும் மழை நீடிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமாகும்.
