இந்தியாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாகரிக உரையாடல் மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக், காலநிலை மாற்றம் மனித நாகரிகங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் தெற்காசிய நாடுகள் எதிர்கொள்ளும் வெள்ளம், வறட்சி, இயற்கை பேரிடர்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் பாகிஸ்தானில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ள பாதிப்புகளை அவர் சுட்டிக்காட்டினார். இயற்கை பேரிடர்கள் நாடுகளின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பதாக தெரிவித்தார்.
பண்டைய நாகரிகங்களின் வரலாற்று நினைவுச் சின்னங்கள்கூட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார். மனிதர்களின் செயல்பாடுகளும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமாக இருப்பதாக கருத்து தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கலாசார உறவுகள், வரலாற்று பாரம்பரியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.
