அமெரிக்க அரசின் முக்கிய தகவல்களை சேகரிப்பதற்காக சீன உளவு அமைப்புகள் LinkedIn உள்ளிட்ட வேலைவாய்ப்பு தளங்களை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பத்திரிகையாளர்கள், வர்த்தக ஆலோசகர்கள் மற்றும் அமெரிக்க அரசின் முக்கிய விவரங்களை அறிந்திருக்கக்கூடிய நபர்களை குறிவைத்து போலியான வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் தொடர்பாக பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன.
