திருவனந்தபுரம்: கேரள சிறைகளில் கடந்த 2010ம் ஆண்டு “புட் பார் ஃப்ரீடம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி சிறைகளில் சுவையான சுவையான உணவுகள் தயாரிக்கப்பட்டு கைதிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், கைதிகள் தயாரித்த உணவுகளும் வணிக ரீதியாக விற்கப்பட்டன.
திருவனந்தபுரம், திருச்சூர், கண்ணூர், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைகளில் 21 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கண்ணூர் சிறை கைதிகள் தயாரிக்கும் சிக்கன் பிரியாணி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து கண்ணூர் சிறை அதிகாரிகள் கூறியதாவது: கண்ணூர் சிறையில் கடந்த 2012ம் ஆண்டு புட் பார் ஃப்ரீடம் திட்டம் செயல்படுத்தப்பட்டது.சிறை கைதிகள் தினமும் விதவிதமான உணவு வகைகளை தயாரித்து வருகின்றனர். மக்கள் மத்தியில் சிக்கன் பிரியாணி மிகவும் பிரபலமானது. உணவு வகைகளை நேரடியாகவும் ஆன்லைனிலும் விற்பனை செய்து வருகிறோம். 5 ஆண்டுகளில் மட்டும் 8.5 கோடி வருவாய். “பட் பார் ப்ரிடோம்” திட்டத்திற்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.
இது தவிர கைதிகளுக்கு தொழில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற்ற கைதிகள் சிறையில் இருந்து விடுதலையான பிறகு சொந்தமாக ஹோட்டல் நடத்தலாம். இவ்வாறு கண்ணூர் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். உணவு தானியங்கள் மற்றும் இறைச்சி விலை உயர்வால், கேரள சிறை கைதிகள் தயாரிக்கும் உணவின் விலை கடந்த பிப்ரவரி மாதம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகும் விற்பனை சிறப்பாக நடந்து வருகிறது.